Published : 29 Dec 2016 09:04 AM
Last Updated : 29 Dec 2016 09:04 AM

மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்: பயணிகள் கடும் அவதி

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிசம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும், தரமற்ற பேருந்துகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஊழியர் களை தண்டிப்பதையும், அபராதம் விதிப்பதையும் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை வடபழனி, கோயம்பேடு, திருவான் மியூர், தி.நகர், மத்திய பணிமனை, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பேருந்துகள் வெளியே செல்லாமல் பணிமனைகளிலேயே நிறுத் தப்பட்டன.

சுமார் 2 மணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. இதை யடுத்து, மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெளியூரில் இருந்து கோயம் பேடு வந்திருந்த பயணிகளும் அதிகாலையில் பணிக்கு செல் வோரும் மாநகர பேருந்து களுக்காக ஆங்காங்கே காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் பேருந்து சேவை கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டனர். காலை 6.30 மணிக்கு பிறகே பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x