குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் ஆலோசனை

பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிதி அமைச்சர் பிடிஆர்  
பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிதி அமைச்சர் பிடிஆர்  
Updated on
1 min read

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உரையாற்றினார். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் EAC குழுவுடன் நேற்று நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செ‌ய்‌திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in