Last Updated : 24 Nov, 2022 12:58 PM

1  

Published : 24 Nov 2022 12:58 PM
Last Updated : 24 Nov 2022 12:58 PM

சிதம்பரம் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயிலின் பூட்டு உடைப்பு: இளைஞரிடம் போலீஸ் விசாரணை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் கதவில் பூட்டை உடைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்திலான பெரிய கதவு ஒன்று அமைத்துள்ளனர். நந்தனார் நுழைந்த வாயிலை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றிரவு ( நவ.23) நடராஜர் கோயிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நந்தனார் வாயில் கதவு பூட்டை உடைத்துள்ளார். அதனை பார்த்த தீட்சிதர்கள் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தினர். அதன் பெயரில் காவல்துறையினர் கோயிலுக்கு சென்று அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிதம்பரம் கனக சபை நகரை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் நந்தனார் மீது பற்று கொண்டவர் என்றும், இந்த வாயிலை தீண்டாமை என பூட்டி உள்ளார்கள். இதனை உடைக்க வேண்டும் எனவும், நடராஜர் எல்லாரையும் காப்பாற்றுகிறார் என்று கூறும் அவர், இந்த கோயில் பூட்டை உடைத்தது தவறு என்றால் அவரே என்னை தண்டிக்கட்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் இதற்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற விசாரணையில் இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கதவுக்கு அருகே பொங்கல் வைத்து கற்பூர சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, இன்று காலை (நவ.24) காலை சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறையினர் நடராஜர் கோயிலுக்கு சென்று பூட்டு உடைக்கப்பட்ட சுவர் பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x