சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மறைவு: முதல்வர் இரங்கல்

காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்
காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி 165 வது மாநகராட்சி வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் உள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (நவ,24 இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மாநகராட்சியின் 165-ஆவது வார்டு கவுன்சிலரும், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தம் பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in