ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு

ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு
Updated on
1 min read

சென்னை: இந்திய ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நவ.27 முதல் 29-ம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு கிடைத்த தமிழ்நாடு,ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதுதொடர்பாக, கடந்த ஆக. 8-ல்வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள தங்களது சான்றிதழ்களுடன் வந்து பங்கேற்கலாம்.இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இத்தேர்வு வெளிப்படையா கவும், நேர்மையாகவும் நடைபெறும். எனவே, விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்துஏமாற வேண்டாம் என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல்அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in