Published : 24 Nov 2022 04:15 AM
Last Updated : 24 Nov 2022 04:15 AM

கோவை நகருடன் 118 கிராமங்களை இணைத்து கோவை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கம்

கோவை: கோவை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் 118 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்க தொழில் அமைப்புகள் உள்ளிட்ட பலர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக உள்ளூர் திட்டக்குழும செயலர் அரசுக்கு கருத்துருவும் சமர்ப்பித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பெருநகர வளர்ச்சிக்குழுமம் உருவாக்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்ட அறிக்கையின்படி அன்னூர், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை, மேட்டுப்பாளையம், பேரூர், சூலூர் தாலுகாக்களை சேர்ந்த 96 கிராமங்கள், 1531.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கோவை நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அன்னூரில் வடவள்ளி, காரேகவுண்டம்பாளையம், கரியாம்பாளையம், மசகவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், வெள்ளமடை, அக்ரகாரசாமக்குளம், இடிகரை, கீரணத்தம், கொண்டையம்பாளையம், எஸ்.எஸ்.குளம், குன்னத்தூர், காளிபாளையம், வெள்ளானைப்பட்டி, பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

கோவை வடக்கு தாலுக்காவில் நாயக்கன்பாளையம், கூடலூர், பிளிச்சி, நம்பர் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், சோமையம்பாளையம், கவுண்டம்பாளையம், தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம், புலியகுளம், கிருஷ்ணராயபுரம், கணபதி, சங்கனூர், துடியலூர், வெள்ளகிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோவை, ராமநாதபுரம், செளரிபாளையம், உப்பிலிபாளையம், சிங்காநல்லூர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

கிணத்துக்கடவு தாலுகாவில் பொட்டையாண்டிபுரம்பு, வடபுத்தூர், சொலவம்பாளையம், அரசம்பாளையம், பனப்பட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மதுக்கரை தாலுகாவில் குறிச்சி, வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, சீரபாளையம், மதுக்கரை, எட்டிமடை, பிச்சனூர், திருமலையாம்பாளையம், பாலத்துறை கருண்சாமி கவுண்டம்பாளையம், தாமகவுண்டம்பாளையம், நாச்சிபாளையம், வழுக்குப்பாறை, அரிசிபாளையம், மயிலேறிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம், ஓராட்டுக் குப்பை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் தாலுகாவில் மருதூர், காரமடை, சிக்காரம்பாளையம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

பேரூர் தாலுகாவில் தேவராயபுரம், தொண்டாமுத்தூர், கலிங்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, வேடபட்டி, சித்திரைச்சாவடி, குமாரபாளையம், பேரூர், தென்னமநல்லூர், வீரகேரளம், போளுவாம்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திப்பாளையம், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், குனியமுத்தூர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

சூலூர் தாலுகாவில் மோப்பிரிபாளையம், கிட்டாம்பாளையம், கருமத்தம்பட்டி, செம்மாண்டம்பாளையம், கரவழிமாதப்பூர், கணியூர், அரசூர், ராசிபாளையம், நீலாம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி, கண்ணம்பாளையம், கலங்கல், கனகயம்பாளையம், சூலூர், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, இடையர்பாளையம், கள்ளபாளையம், பச்சாபாளையம், போகம்பட்டி, செலக்கரிசல் ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன. கோவை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் மொத்தம் 118 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x