கோரிக்கைகள் குறித்து சாலை ஆய்வாளர்கள் அமைச்சரிடம் மனு

கோரிக்கைகள் குறித்து சாலை ஆய்வாளர்கள் அமைச்சரிடம் மனு
Updated on
1 min read

சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி வரும் சாலை ஆய்வாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் நேற்று பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு அளித்தனர். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் 1970-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையில்பணிபுரியும் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்களை அரசுப் பணியாளர்களாக அறிவிக்க கோரிக்கை அளித்தனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று கருணாநிதி ஆணைபிறப்பித்தார்.

1996-ம் ஆண்டு கருணாநிதி,தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகளை பராமரிக்க 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணியிடத்தை உருவாக்கினார். அதன் அடிப்படையில்தான் சாலை பணியாளர்கள் 4கிமீ-க்கு ஒரு நபர் வீதம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in