வானிலை முன்னறிவிப்பு: 4 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (நவ.22) மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நேற்று (நவ.22) மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து. இன்று தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (நவ.23) வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 என்ற அளவில் இருக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in