

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.