சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்
Updated on
1 min read

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த மருத்துவர் கே.கனகவல்லி விருப்பத்தின்பேரில், மாநில அரசு சித்த மருத்துவப் பணியிடத்துக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராக உள்ள மருத்துவர் ஆர்.மீனாகுமாரிக்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சித்த மருத்துவ உயர் கல்விக்கான தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என இருபெரும் நிறுவனங்களுக்கு ஒருவரே தலைமை வகிப்பது இதுவே முதல்முறை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in