Published : 23 Nov 2022 06:26 AM
Last Updated : 23 Nov 2022 06:26 AM

அரசு கேபிள் டிவி நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஆபரேட்டர்கள் கோரிக்கை

சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் அதை நம்பியுள்ள ஆபரேட்டர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோருக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வழியாக தமிழக மக்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, 27 லட்சம் வீடுகளுக்கு ஒளிபரப்பு செய்து வந்தது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 27 லட்சம் செட்டாப் பாக்ஸ்களும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக செயல்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சந்தாதாரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஆபரேட்டர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது உலகக் கோப்பை கால்பந்து மற்றும் முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒளிபரப்பு இல்லாததால் சந்தாதாரர்கள் டிடி.ச்-க்கு மாறி வருகின்றனர். இதனால் சந்தாதாரர் இழப்பும் ஏற்படுகிறது.

எனவே, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தை பாதுகாப்பதுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x