

குற்றச் செயல் புரிந்தவர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் ஆபத்தானது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண் டத்தைச் சேர்ந்தவர் இசக்கிராஜா. இவர் ஜவுளி மற்றும் செருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது ஒரு சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ததாக தூத்துக்குடி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இசக்கிராஜா உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அதில், புகார் அளித்த சிறுமி தனது கடைக்கு வந்தபோது கண் ணாடி பொருட்களை உடைத்து விட்டார். இதனால் அந்த சிறுமியை அடித்தேன். இதனால் சிறுமி எனக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்துள்ளார் எனக் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது இசக்கிராஜா தரப்பில், சிறுமியை அழைத்து விசாரித்தால் உண்மை தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புகார் அளித்த சிறுமியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது கண்ணாடி பொருட்களை உடைத்ததால் இசக்கிராஜா தன்னை தாக்கியதா கவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சிறுமி தெரிவித்தார்.
ஆனால் போலீஸ் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் மனுதாரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸாரிடமும், நீதித்துறை நடுவர் முன்பும் அளித்த வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இப்போது இங்கு பொய் சொல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறுமியின் வாக்குமூலத்தை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
போலீஸார், நீதித்துறை நடுவர் ஆகியோரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் மனுதாரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மனுதாரர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் இந்த நீதிமன்றத்தில் சிறுமி உண்மையை மறைத்து மனுதாரர் கூறியது போன்று தெரிவித்துள்ளார்.
குழந்தையும், தெய்வமும் ஒன்று என்பது தமிழின் பழமை யான பழமொழி. ஆனால் தொழில்நுட்ப வசதியால் இக் காலத்து குழந்தைகள் மிகவும் முதிர்ச்சியடைந்தது போல் நடந்து கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் பொய் சாட்சியளிப்பார் என எதிர்பார்க்க வில்லை. மனுதாரர் அரசியலில் உள் ளார். பாலியல் வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காமல் போனால் தன்னால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அச்சத்தில் சிறுமியை தனக்கு சாதகமாக நீதிமன்றத்தில் சொல்ல வைத்துள்ளார். அத்தோடு நீதி மன்ற நடவடிக்கையை தனக்கு தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரையும் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.
மனுதாரரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக பெண்கள், சிறுமிகள் பாதிக் கப்படக்கூடும். தேர்தலில் போட்டியிடுவதற்கு குற்ற வழக்கு தகுதியாக இருப்பது நாட்டின் சாபக்கேடு.
மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும். இதனால் மனு தாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.