போலீஸ் வாகன தணிக்கையின்போது விலகிச் சென்றவர் வேன் மோதி பலி: எஸ்ஐ மீது பொதுமக்கள் தாக்குதல்

போலீஸ் வாகன தணிக்கையின்போது விலகிச் சென்றவர் வேன் மோதி பலி: எஸ்ஐ மீது பொதுமக்கள் தாக்குதல்
Updated on
1 min read

சேலம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் இருந்து விலகிச் சென்றபோது, வேன் மோதி இறந்தார். இதனால் அப்பகுதி மக்கள் போலீஸ் உதவி காவல் ஆய்வாளரின் வாகனத்தை கொளுத்தினர். மேலும் போலீ ஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி போலீஸார் வாகன தணிக்கையில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர். ஹெல் மெட், ஆர்சி, இன்சூரன்ஸ் இல் லாத வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, இளம்பிள்ளையைச் சேர்ந்த சரவணன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் சென்ற சரவணனை போலீஸார் நிறுத்த முயன்றனர். அப்போது, போலீஸாரின் பிடிக்குள் சிக்காமல் இருக்க, விலகிச் சென்ற சரவணனின் வாகனம் மீது, எதிரே ஜல்லி லோடு ஏற்றி வந்த வேன் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். போலீ ஸார் வாரம்தோறும் வெள்ளிக் கிழமையில் சோதனை என்ற பெயரில் பணம் வசூலில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாகவே விபத்து ஏற் பட்டதாகவும் கூறினர்.

வாகனத் தணிக்கையில் ஈடுபட் டிருந்த மகுடஞ்சாவடி போலீஸ் எஸ்ஐ பழனிசாமியின் இரு சக்கர வாகனத்தை பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர். பின், ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் எஸ்ஐ பழனிசாமி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், உடன் இருந்த 3 போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தினர். காயம் அடைந்த எஸ்ஐ பழனிசாமி உட்பட 4 போலீஸார், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இறந்த சரவணனின் உடலை ரோட்டில் வைத்து பொது மக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத் துக்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமாதானம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in