

சேமிப்புக் கணக்கில் இருந்த பணத்தை, கடன் கணக்கில் வரவு வைத்துவிட்டு, குடும்ப செலவுக்கு பணம் தர மறுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு டெய்லர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் பண்டுதக் குடியை சேர்ந்தவர் ராமலிங்கம் (50), டெய்லர். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராமலிங்கத்தின் மூத்த மகன் பிரதீபனின் படிப்புக்காக, கூத்தா நல்லூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அந்தக் கடன் தொகையில் ரூ.15 ஆயிரத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டார். மீதி யுள்ள ரூ.10 ஆயிரத்தை வட்டியு டன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், ராமலிங்கம் தனது சேமிப்புக் கணக்கிலிருந்த ரூ.2 ஆயிரத்து 55-ல் இருந்து வீட்டுச் செலவுக்கு பணம் எடுப்பதற்காக நேற்று வங்கிக்குச் சென்றார். பணம் தர மறுத்ததுடன் சேமிப்புக் கணக்கிலிருந்த பணத்தை, கல்விக்கடன் கணக்கில் வங்கி அதிகாரிகள் வரவு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த நிலையில் வீடு திரும்பிய ராமலிங் கத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள் ளது. உடனடியாக கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி ரீட்டா கூறியபோது, “வங்கியில் பணம் எடுக்க எழுதிக் கொடுத்த சலானை வங்கி அதிகாரி கிழித்து விட்டு, பணம் தரமுடியாது என்று கூறியதுடன் வீட்டை ஜப்தி செய்வோம் என்றதால் அதிர்ச்சியில் என் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது” என்றார்.
இதுகுறித்து வங்கித் தரப்பில் விசாரித்தபோது, கடன் தொகையை முறையாகத் திருப்பி செலுத்தாமல் வைத்திருப்பவர்களின் சேமிப் புக் கணக்கில் உள்ள பணத்தை, கடன் கணக்கில் வரவு வைக்கு மாறு வங்கியின் தலைமை அலு வலகத்தில் இருந்து நிர்பந்தித்து வருவதால், அதன்படியே ராம லிங்கத்தின் சேமிப்புக் கணக்கி லிருந்த பணம் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.