

ஆளுங்கட்சிக்கும், ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது.
இந்த உண்ணாவிரதத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இப்போராட் டத்துக்கு தலைமை வகித்த சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ, பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:
ஓமந்தூராரும், காமராஜரும், அண்ணாவும் அலங்கரித்த முதல்வர் பதவியில் விரைவில் சசிகலா அமர்வதற்கான அறிகுறி கள் பலமாகத் தென்படுகின்றன. ஆளுங்கட்சியின் முன்னணி நிர் வாகிகளே சசிகலா தலைமை தாங்க வரும்படி கோரி வருவதை தினமும் பார்க்கிறோம். சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
ஆளுங்கட்சிக்கும், ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற மாயை கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை இதுவல்ல. கோடிக்கணக்கான மக்கள் குமுறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஒருமுகப்படுத்துவதற்காகவும் இந்த உண்ணாவிரதப் போராட் டத்தைத் தொடங்கியுள்ளோம். இதையொட்டி கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியிருக் கிறோம்.
சசிகலா தலைமையை எதிர்க் கும் ஒவ்வொருவரும் இப்போராட் டத்தில் ஒரு மணி நேரமாவது கலந்துகொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவிக்கக் கோரு கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த உண்ணாவிரதப் போராட் டம் நாளை வரை நடைபெறு கிறது.