Published : 22 Nov 2022 07:26 AM
Last Updated : 22 Nov 2022 07:26 AM

சொத்து வரியை வட்டி இன்றி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-23-ம் நிதியாண்டின், 2-ம் அரையாண்டு சொத்து வரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிமுனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வோர் அரையாண்டின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் அக்.1 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டுக்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியை 2 சதவீத தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் டிச.15-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் 2-ம் அரையாண்டில் நவ. 15-ம் தேதி வரை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்துஉரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x