Published : 22 Nov 2022 04:35 AM
Last Updated : 22 Nov 2022 04:35 AM

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை - திருச்சியில் இரு வார விழா தொடக்கம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வாசக்டமி இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த விழா நேற்று தொடங்கி டிச.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இஎஸ்ஐ), மேம்படுத்தப்பட்ட அரசு வட்டார சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் வாசக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறைய ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்காமலேயே எளிய முறையில் மேற்கொள்ளப்படும். சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த உடனேயே வீட்டுக்குச் செல்லலாம். இதனால் பின்விளைவுகள் எதுவும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்ப நல கருத்தடை செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, 0431-2460695, 94432 46269 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x