

அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எஸ்.திவாகர், பி.வி.செல்வகுமார், ஓ.செல்வம், ஆர்.அன்புக்கரசு ஆகியோர் நேற்று கூட்டாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் அதிமுகவில் எந்த பொறுப் பிலும் இல்லை. மேலும், இவர் கட்சி யின் அடிப்படை உறுப்பினரும் கிடையாது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்களில் சாதி ரீதியாக பேசி செய்தி வெளியிட்டு வருகிறார்.
மறைந்த முன் னாள் முதல்வர் ஜெய லலிதாவின் நெருங்கிய தோழியான, சசிகலா மீது வீண் பழி சுமத் துதல், சாதி ரீதியில் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் அதிமுக தொண்டர்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது.