

ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த 203 பேரின் குடும்பத் துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது மறைவால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண் டர்கள், ஆதரவாளர்களில் சிலர் உயிரிழந்தனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதல் வர் ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சி யில் தமிழகம் முழுவதும் 203 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சார் பில் ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள் கிறோம். உயிரிழந்த 203 பேரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார் பில் தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.