பிரியா மரணம் | மருத்துவர்களின் சிகிச்சையில் எந்தக் குறையும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்தக் குறையும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு தொடர்பாக சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.21) ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்களை கைது செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் சங்கங்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், "அந்த மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கும். மருத்துவர்களின் சிகிச்சையில் எந்தக் குறைவும் இல்லை. ஆனால், மரணத்திற்கு மருத்துவரின் கவனக்குறைவும், அலட்சியமும் காரணம். மருத்துவர்களின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள். ஆனால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூடாது என்றுதான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதைக் கொலைக் குற்றமாக கருதக் கூடாது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று கூறுகிறார்கள்.

23-ம் தேதி 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெறும். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அன்றே வெளியிடப்படும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in