முதல்வர் மு.க.ஸ்டாலின்| கோப்புப் படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்| கோப்புப் படம்

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

Published on

சென்னை: மதுரையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மதுரையில், கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த யோ.முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன் கடந்த 13 ஆம் தேதியன்று அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்தமுற்றேன்.

உயிரிழந்த யோகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in