கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட வீடு
மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட வீடு
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி, மேல காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி(40). கொத்தனாரான இவர், இந்து முன்னணி மாநகரச் செயலாளர் பதிய வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சக்கரபாணி வழக்கம்போல் தூங்கி எழுந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வாசல் முழுவதும் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் சென்று பார்த்தபோது வீட்டின் வாசலில் 180 மில்லி அளவு கொண்ட பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி, அதில் திரியை வைத்து கொளுத்தி வீசி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் இருந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் அந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் எஸ்பி ரவளி பிரியா சம்பவ இடத்தில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்கிறார்
தஞ்சாவூர் எஸ்பி ரவளி பிரியா சம்பவ இடத்தில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்கிறார்

மேலும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதை அறிந்து தஞ்சாவூர் எஸ்பி ரவளி பிரியா பார்வையிட்டார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in