

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், எனது பாட்டியின் பெயரி லான பாரம்பரிய சொத்து. அதில் எனக்கும் பங்கு இருக்கிறது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெய லலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து தமிழக அரசி யலிலும், அதிமுகவிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க, ஜெயலலிதாவின் அண் ணன் மகள் ஜெ.தீபா, தனியாக செயல்பட்டு வருகிறார். அரசி யலில் ஈடுபடப் போவதாகவும் தெரி வித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தனக் கும் பங்கு இருப்பதாக தீபா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு தீபா அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
ஜெயலலிதாவின் சொத்து குறித்து இதுவரை நான் எந்த உரிமையும் கோரவில்லை. எனக்கு பணம், புகழ் ஆகியவற்றில் நாட்டமில்லை என்ற போதிலும், என் பாட்டி பெயரிலான சொத்து என்பதால் அது எங்கள் பாரம்பரியம் என்று நம்புகிறேன். பரம்பரை சொத்து என்பது சட்டப்படி வாரிசுகளுக்கு சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். முன் னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் சரிசமமான பங்கைப் பெற பெண் களுக்கும் உரிமை உள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மற்றவர்கள் கேட்பது போலவே மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து விரிவான அறிக்கை தேவை என்று நினைக் கிறேன். சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றோ, கேள்வி களையோ எழுப்பவில்லை. அப் போலோ மருத்துவமனை மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் உலகத் தரத்திலான சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அவரைப் போற்றிய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகளாக வேண்டும் என பல பேர் போட்டியில் உள்ளனர். நான் புதியவள். இந்த தருணத்தில், எந்த உரிமையும் கோர மாட்டேன். அதற்கு பதில் அரசியலில் எனக்கு கதவுகள் தானாக திறக்கட்டும் என காத்திருப்பேன். எனது பார்வையில், அரசியல் என்பது மிகப்பெரிய சவால். நான் ஜனநாயகத் தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, யாரை தேர்வு செய்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது. அதுதான் சமூகத்தின் நன்மைக்கும் உகந்தது.
போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போது அதுபோன்ற செயல்கள் தேவை இல்லை என நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் அமைதியாக இருப்பதோடு, என் பெயரில் எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.