காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி - தமிழக அரசு தகவல்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி - தமிழக அரசு தகவல்
Updated on
2 min read

காவிரி விவகாரத்தில் தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் நெற்களஞ்சிய மான காவிரி டெல்டா பகுதி யின் ஜீவநாடி காவிரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் நமக்குள்ள காவிரி நதிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரு கிறது.

காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ல் பிறப்பித்தது. இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத் தில் சிறப்பு முறையீட்டு மனுக் களை தாக்கல் செய்தன. தமிழக அரசும், இறுதி ஆணையில் பாதக மான பகுதிகளை ஆய்வு செய்ய, சிறப்பு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

2013-ல்..

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்தால், மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கடந்த 2013-ல் மத்திய அரசிதழில் வெளியிட்டது. இத னால் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்துக்கு உரிய நீரை விடுவிக்க முன்வரவில்லை. இதை யடுத்து, நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, ஆகஸ்ட் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத் துக்கான பங்குநீரைப் பெற மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசு, தமிழகத்துக்கு நீர் விடுவிப்பது தொடர்பாக அவ்வப்போது உத்தரவு களை வழங்கியது.

இதற்கிடையி்ல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த அக்டோபர் 10-ம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது, முதல்கட்டமாக அந்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதற்கு உத்தரவு வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

தமிழக அரசு இந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது என வாதிட்டது. மத்திய அரசு இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு உட்பட்டதல்ல என தெரிவித்தது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 19-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக வழக்கை ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிசம்பர் 9-ம் தேதி (நேற்று) வழங்கிய தீர்ப்பில், தமிழக அரசின் வாதத்தை ஏற்று காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது.

டிசம்பர் 15-ம் தேதி

மேலும், இந்த மனுக்கள் மீது உத்தரவுகள் வழங்க டிசம்பர் 15-ம் தேதி பட்டியலிடும்படியும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு தினசரி விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீரை விடுவிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 18-ம் தேதி பிறப்பிக் கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் தெரிவித் துள்ளது. இது, முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி யாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in