Published : 20 Nov 2022 11:58 AM
Last Updated : 20 Nov 2022 11:58 AM

தேவநேயப் பாவாணர் பேத்தி மரணம்: முதல்வர் இரங்கல்

மறைந்த தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் | கோப்புப்படம்

சென்னை: "தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய ' திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய ' திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் அவர்கள் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்.

அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேவநேயப் பாவாணாரின் பேத்தி பரிபூரணம்(57) உடல்நலகுறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகுதண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவசெலவை அவரால் ஈடுகட்ட முடியாததால் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனாலும், முதுகு தண்டுவடம் பிரச்சனைக்கு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதனால், சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு உதவும்படி அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x