விடுதலையான ஜெயக்குமாருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை

விடுதலையான ஜெயக்குமாருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை
Updated on
1 min read

திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக சிறப்பு முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல அழைத்தனர். ஆனால் ராபர்ட் பயஸ் தனக்கு தொண்டை வலி மட்டுமே இருப்பதாகக் கூறி, சிகிச்சைக்கு மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து மூச்சுத் திணறல் காரணமாக அவதியுற்ற ஜெயக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in