

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரவீணா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுயேச்சை வேட்பாளரான என்னை பிரச்சாரம் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிரச்சார வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரர்கள் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.