Published : 07 Nov 2016 09:22 AM
Last Updated : 07 Nov 2016 09:22 AM

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிப்.1-ல் கும்பாபிஷேகம்: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்

காமாட்சியம்மன் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள், வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி கள் நேற்று அறிவித்தார்.

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதி யில் பிரசித்தி பெற்ற காமாட்சி யம்மன் கோயில் அமைந்துள்ளது. சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில், இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் அமைந்துள்ள இக்கோயிலில், 1994-ம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் பாலாலயத்துடன் தொடங்கின.

இதையடுத்து, ராஜகோபுரத்தில் உள்ள தங்கக் கலசம் மற்றும் செப்புக் கலசங்கள், அறநிலையத் துறை துணை ஆணையர் முன்னி லையில் போலீஸ் பாதுகாப்புடன் கோபுரத்தில் இருந்து கீழே இறக் கப்பட்டன. அவற்றை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடை பெற்று வரும் திருப்பணிகளில், கோயில் குளம் மற்றும் படிக்கட்டு களை சுற்றியுள்ள மண்டபங்கள், குளத்தின் மையப்பகுதியில் உள்ள மண்டபங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. தெற்கு ராஜகோபுரம் அருகே பசுமைப் பூங்கா அமைப்ப தற்காக மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மூலவர் சந்நிதி அருகில் இருந்து குளக்கரை வரை சுற்றுச்சுவரையொட்டி, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

மூலவர் சந்நிதிக்கு செல்லும் வழியில், தங்க கோபுரத்தை பக்தர்கள் பார்த்து செல்லும் வகையில் கண்ணாடி மாதிரியைப் போன்ற தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதன்மைக் கொடிக் கம்பம் எதிரில் பசுமைச் சூழலை ஏற்படுத்தும் வகையில் புல்தரை அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயில் கும் பாபிஷேகம் தொடர்பாக சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி கள் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது, திருப்பணிகள் அனைத்தும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ள தாகவும், பிப்ரவரி 1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து, காமாட்சியம்மன் கோயில் காரியம் விஸ்வநாத சாஸ்திரிகள் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்து பிப்ரவரி 1-ம் தேதி காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மூலவர் சந்நிதியின் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட விமானம் ரூ.20 கோடி மதிப்பிலும், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் ரூ.5 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x