

சென்னை தலைமைச் செயலகத் தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கூட்டுறவு அச்சகங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அப்போது அமைச்சர் கூறிய தாவது: தமிழகத்தில் 26 கூட்டுறவு அச்சகங்கள் 12 ஆயிரத்து 438 உறுப்பினர்கள், ரூ.2 கோடியே 36 லட்சம் பங்குத்தொகையுடன் செயல்பட்டு வருகின்றன.
இவை கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களின் அச்சுத் தேவையை நிறைவேற்றி வருகின்றன. கடந்த 2011-12-ல் ரூ.45 கோடியாக இருந்த ஆண்டுக் குறியீடு தற்போது 2016-17-ல் ரூ.71 கோடியே 23 லட்ச மாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் கடந்த மாதம் 31-ம் தேதி வரை ரூ.29 கோடியே 40 லட்சத்துக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அச்சகங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன.
சென்னை, சேலம், வேலூர், கோவை, திருச்சி, நெல்லை மற்றும் மதுரை ஆகிய 7 கூட்டுறவு அச்சகங்கள் கடந்த 2013-14-ல் ரூ.3 கோடியே 68 லட்சம் கோடியில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கிகள், இதர நிறுவனங்களுக்கான கணினி எழுது பொருட்களை தயாரிக்கும் மற்றும் அச்சடிக்கும் பணிகளை யும் வண்ண அச்சுப் பணிகளை யும் இந்த அச்சகங்கள் மேற்கொள் கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.249 கோடியே 18 லட்சம் அளவில் அச்சுப்பணிகள் கூட்டுறவு அச்சகங் களில் நடந்துள்ளன. மேலும் இந்த கூட்டுறவு அச்சகங்கள் லாபத்தில் செயல்பட தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர்கள் த.ஆனந்த், க.ராஜேந்திரன், ஆர்.கார்த்தி கேயன், ஆர்.பிருந்தா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.