

பணியிட மாறுதலுக்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி வீடு, அலுவலகம் உட்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
சென்னையில் சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக இருப்பவர் ஜானகி அருண்குமார். இவர் பணியிட மாறுதலுக்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். நுங்கம்பாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடந்தது. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. ஜானகி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.