

சென்னை: தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி 19 மற்றும் 20 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 21 மற்றும் நவ.22 ஆம் தேதி வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்று (நவ.23) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மின கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் மழை பதிவாகவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.