வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: பணியிட மாற்றம், பணி நீக்கம், தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் பணியிட மாற்றம் செய்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (19-ம் தேதி) நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு ஏற்பட்டதையொட்டி, இன்று நடைபெற இருந்த வங்கி வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in