பத்திரிகை சுதந்திரத்தைவிட நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து

பத்திரிகை சுதந்திரத்தைவிட நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து
Updated on
2 min read

பத்திரிகை சுதந்திரம் முக்கிய மானது. ஆனால், நாட்டின் பாது காப்பு அதைவிட முக்கிய மானதாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

இந்திய கட்டுனர் சங்கத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந் தது. இதில் கலந்துகொள்ள வந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஜனவரியில் பதான் கோட்டில் நடந்த தீவிரவாத தாக்கு தல் மற்றும் பாதுகாப்பு முக்கியத் துவம் வாய்ந்த ராணுவ நடவடிக்கை கள் குறித்து என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி விதிகளை மீறி செய்திகளை ஒளிபரப்பியது. இதுகுறித்து பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு விசாரித்தது. அதன் அடிப்படையில் என்டிடிவி இந்தியா தொலைக்காட்சியின் ஒருநாள் ஒளிபரப்பு தடை செய் யப்பட்டது.

தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எந்த செயலையும் அனுமதிக்க முடியாது. பத்திரிகை சுதந்திரம் முக்கியமானது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு அதைவிட முக்கியமானதாகும். ஊடகங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்.

தொலைக்காட்சி மீது நட வடிக்கை எடுப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் சர்ச்சைக்குரிய, தடை செய்யப்பட்ட காட்சிகளை ஒளி பரப்பியதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புக்கு 21 முறை தடை விதிக்கப்பட்டது. நெருக்கடி நிலை வந்துவிடும் என்றெல்லாம் இப்போது பேசுபவர்கள் அந்த நேரத்தில் எங்கே போனார்கள்?

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்துக்கு காங்கிரஸ் ஆட்சி யில் ரூ.500 கோடி மட்டும் ஒதுக் கப்பட்டது. பாஜக ஆட்சியில் இத்திட்டத்துக்கு ரூ.29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. கட்டு மானத் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவும், வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யவும் கட்டுமானத் திட்டங் களுக்கான அனுமதி கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்தால் ஒற்றைச் சாளர முறையில் 60 நாட்களில் அனுமதி வழங்கும் முறையை கொண்டுவர உள் ளோம். இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் விரைவில் ஆலோ சனை நடக்கவுள்ளது. கட்டுமானத் திட்டத்துக்கு அந்தந்த மாநிலமே அனுமதி அளிக்கும் அதிகாரம் வழங்கப்படுவது குறித்து இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதன்பின்னர் இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல் படுத்தப்படும்.

சென்னை வந்ததும் தமிழக அரசு தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தேன். முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் தெரிவித்தார். அவர் விரைவில் உடல்நலம் பெற்று அரசுப் பணியைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

முன்னதாக இந்திய கட்டுனர் சங்கத்தின் பவள விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு, 72 ஆண்டுகால விழா மலரை வெளியிட்டார். அதை இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.சீனய்யா பெற்றுக்கொண்டார். சங்க பவள விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு தபால் உறையை சென்னை நகர மண்ட அஞ்சல் துறைத் தலைவர் ராதிகா சக்கரவர்த்தி வெளியிட, இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அறங்காவலர் சின்னசாமி ராஜூ பெற்றுக்கொண்டார். கட்டுமானத் துறைக்கு முக்கியப் பங்காற்றிய லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன முன்னாள் துணைத் தலைவர் கே.வி.ரங்கசாமி, இந்திய கட்டுனர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in