மோடியின் திடீர் அறிவிப்பு: பொதுமக்கள் கருத்து

மோடியின் திடீர் அறிவிப்பு: பொதுமக்கள் கருத்து
Updated on
2 min read

கருப்பு பண பதுக்கலைத் தடுக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், தற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பி.கோபு (ஓய்வூதியர்):

இது நல்ல அறிவிப்புதான். ஆனால் இதை 28-ம் தேதி வாக்கில் அறிவித்திருக்க வேண்டும். அப் படிச் செய்திருந் தால் மாதசம்பளம், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழில் செய்வோர் எந்த பாதிப்பையும் அடைந்திருக்க மாட்டார்கள். இப்போது மளிகை, மருந்தகம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் 500 ரூபாய் நோட்டை பெற்றுக்கொள்ளாததால், நடுத்தர மக்கள் அவதிப்படு கின்றனர்.

ஆர்.ஜெயசுதா (ஆசிரியை)

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வரும். அதே சமயம் இந்த அறிவிப்பை இவ்வளவு அவசர மாக வெளியிட் டதால் நடுத்தர மக்கள் சிரமத்துக்கு ஆளாயினர். தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நள்ளிரவு வரை ஏடிஎம் மையங்கள் முன்பு காத்திருக்க நேர்ந்தது.

பாஸ்கர் (ஸ்டுடியோ உரிமையாளர்)

இந்த அறிவிப் பால் ஏழை, நடுத்தர மக்களுக்கு சில நாட்கள் பாதிப்பு இருக்கும். அனைத்து வியா பாரிகளுக்கும் வங்கிகள் சார்பில் இலவச ஏடிஎம் மெஷின்களை வழங்கி கார்டுகள் மூலம் வர்த்தக பரிமாற் றங்களை கொண்டுவந்தால், இந்த திட்டத்தை கொண்டு வந்ததன் உண்மையான குறிக்கோள் நிறை வேறும்.

என்.பூமா (கல்லூரி பேராசிரியை):

இது மிகவும் துணிச்சலான நட வடிக்கை. திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என அறிவிக் கப்பட்டிருப்பதால் சற்று சிரமமாகத் தான் உள்ளது. சாதாரணமாக நடுத் தர குடும்பங்களில் வீட்டின் செலவுக் காக கையில் ரூ.10 ஆயிரம் வரை வைத்திருப்போம். அவையும், பெரும்பாலும் ரூ.1000, ரூ.500 நோட்டுகளாகவே இருக்கும். திடீரென அன்றாட செலவுக்கு பணம் இல்லாத சூழல் ஏற்படும்போது பதற்றம் உண்டாவது இயல்புதான். எனினும் இந்த சிரமங்கள் ஓரிரு நாள்தான் இருக்கும்.

எஸ்.ஜெயக்குமார் (பலசரக்கு கடை வியாபாரி):

ஒரே நாளில் இந்தியப் பொருளா தாரத்தை அடி யோடு மாற்றிய மைக்கும் துணிச்ச லான இந்த முயற் சியை அனைவரும் வரவேற்க வேண் டும். ஒரு சில நாட்களில் இதன் தாக்கம் பாமர மக்களுக்கு கண்கூடாகத் தெரியும். வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை இன்னும் எளிதாக்க வேண்டும். கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வி.சந்தியா (வழக்கறிஞர்):

இது வரவேற் கத்தக்க முடிவு. இந்த நடவடிக் கையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறுகிய காலத்துக்கு சிரமப்பட வேண்டி யதிருக்கும். ஆனால், சில மாதங்களில் நிலைமை சரியாகும். எதிர்காலத்துக்கு இது மிகவும் நல்ல விஷயமாகும்.

கோ.வெங்கடாசலம் (கட்டுமானப் பொறியாளர்):

பிரதமரின் இந்த நடவடிக்கை கட்டு மானத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தொழிலில் வடமாநில இளை ஞர்கள் நிறைய பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கப்படு கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி சம்பளம் கொடுக்க தாமதம் ஏற்படும். இந்த சம்பளத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ள அவர் களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in