Last Updated : 18 Jul, 2014 10:46 AM

 

Published : 18 Jul 2014 10:46 AM
Last Updated : 18 Jul 2014 10:46 AM

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கண்டனம்: காவிரி பாதுகாப்புக் குழு போராட்ட எச்சரிக்கை

கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத் திற்கு நீர் திறந்து விடப்பட்டுள் ளதற்கு, காவிரி பாதுகாப்புக் குழு தலைவர் மாதே கவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக‌த்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவ தால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாண்டியா மாவட் டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை 91.85 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் அணைக்கு நொடிக்கு 25,747 கன அடி நீர் வரத்து உள்ளது. எனவே, அணையில் இருந்து நொடிக்கு 10,128 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி கபினி அணை நிரம்ப 3 அடியே எஞ்சியுள்ளது. அணைக்கு நொடிக்கு 21,000 கன அடி நீர் வரத்து உள்ளது. நொடிக்கு 17,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரியின் குறுக்கே அமைந் துள்ள ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத் திற்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

கிருஷ்ண ராஜ சாகர் அணை யில் இருந்து தமிழகத்திற்கு கூடு தலாக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு காவிரி பாதுகாப்புக்குழு தலைவர் மாதே கவுடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மைசூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசும்போது, ''கிருஷ்ண ராஜ சாகர் அணை இன்னும் 75 சதவீதம் கூட நிரம்பவில்லை.அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கே இன்னும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஆனால் அதற்குள்ளாக தமிழகத்திற்கு 10 ஆயிரம் கன அடிக்கு அதிகமான நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது. இதனை எதிர்த்து கர்நாடக மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை பொருட்படுத்தாமல் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரை உடனடியாக நிறுத்தாவிடில் தொடர் உண்ணாவிரத‌ போராட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டேன். விவசாய சங்க தலைவர்ளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் மைசூர், மண்டியாவில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x