

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அவரை வரவேற்று மாலை அணிவிப் பதற்காக 56 வயதான சுமா என்ற பெண் யானையை விழா ஏற்பாட் டாளர்கள் அழைத்து வந்தனர். இந்த யானை துன்புறுத்தப்பட்டதாக விலங்குகள் நல அமைப்புக்கு சிலர் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் காமராஜர் அரங்குக்கு வந்த விலங்குகள் நல அமைப்பினர் யானையை பறிமுதல் செய்து வேப்பேரியில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
சட்டவிரோதமாக யானையை பயன்படுத்திய வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது யானையின் உரிமையாளர் சேக ருக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். யானையை பிச்சை எடுக்க வைக்கக்கூடாது என்று யானை பாகன் அண்ணாமலைக்கு எச்சரிக் கையும் விடுத்தார்.