கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தகவல்

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தகவல்
Updated on
1 min read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப் படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடும் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து, அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்தோம். பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in