

கட்டிடத் தொழிலாளர் தேசிய இயக்கம் சார்பில் கட்டிடத் தொழி லாளர்கள் மத்திய சட்டங்களின் அமலாக்கம் குறித்த கருத்துப் பட்டறை மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியதாவது:
இன்றைய சூழலில் நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒப்பந்த தொழி லாளர்கள் உறுப்பினர்களாக இல்லை. அதேபோல, ஒரே வேலை செய்தாலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறை வான ஊதியமும், நிரந்தர தொழி லாளர்களுக்கு அதிக ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஒப்பந்த தொழி லாளர்களுக்கும் ஒரே விதமான ஊதியத்தை அளிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைப்பு சாரா தொழி லாளர்களான கட்டிடத் தொழி லாளர்கள் இதுவரை ஒரே அமைப்பாக திரளவில்லை. இதன் காரணமாக, அவர்களுக் கான சட்டம் முறையாக அமல் படுத்தப்படாமல் உள்ளது. எனவே, சட்ட ரீதியான பலன் களைப் பெற கட்டிடத் தொழி லாளர்கள் அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோ தரருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, கட்டிடத் தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தென் மண்டல ஒருங் கிணைப்பாளர் இரா.கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.