

செங்கல்பட்டு வனப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க மழைக்காக காத்திருப் பதாக வனத்துறையினர் தெரிவித் தனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு வனச் சரகர் கோபு கூறியதாவது: கடந்த 9-ம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக, சிறுத்தைப்புலியின் கால் தடங்கள் எங்களுக்கு கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி சிறுத்தைப்புலி நடமாடும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினோம். 12-ம் தேதி அப்பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலியின் படம் கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகள் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மாற்றப்பட்டன. இருப்பினும் சிறுத்தை புலி சிக்கவில்லை. மழை பெய்தால்தான் அதன் கால் தடங்கள் பதிவாகும். அதை வைத்து தான் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியும்.
சிறுத்தைப்புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் மாமிசத் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக நாய்கள் வரும்போது சில நேரங்களில் கூண்டு மூடிக்கொள்வதுண்டு. அதை கண்டறிந்து கூண்டை நாங்கள் திறந்து வைத்து விடுகிறோம் என்றார் அவர்.