

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் டைமண்ட் திரையரங்கில் 5-வது உலகத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது.
மாநகர காவல் துணை ஆணை யர் சின்னச்சாமி, சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம், டைமண்ட் திரை யரங்க உரிமையாளர் ஆர்.மனோ கரன் உட்பட பலர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். விழாக் குழுத் தலைவர் வி.டி.சுப்பிரமணியம் வரவேற்றார்.
திரைப்பட இயக்குநர் எடிட்டர் பி.லெனின், முரசு கொட்டி நிகழ்ச் சியை தொடங்கிவைத்து பேசும் போது, “இதுபோன்ற உலகத் திரைப் பட விழாக்கள், பெரு நகரங் களில்தான் நடைபெறும். திருப்பூர் போன்ற சாமானியர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடத்து வதன் மூலமாக, அவர்களும் உல கத் திரைப்படங்களை ரசிப்பார்கள்.
திரைத்துறையினருக்கு, திருப்பூர் என்பது ‘சி’ சென்டர். இதுபோன்ற விழாக்களை அரசு நடத்த வேண்டும். ஆனால், இது போன்ற திரைப்பட விழாக்களை நடத்துவதில், தமிழக ஆட்சியாளர் கள் தயக்கம் காட்டுகின்றனர்” என்றார். இயக்குநர் சிவகுமார் வாழ்த்திப் பேசினார். சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலா ளர் இரா.ஈஸ்வரன் நன்றி கூறினார்.
முதல் திரைப்படமாக, இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அடிமைகள் எழுச்சியை விளக்கும் அமெரிக்க திரைப்படம் ‘ஸ்பார்ட்டகஸ்’ திரையிடப்பட்டது.
முன்னதாக, மறைந்த திரைப்பட ஆளுமைகள் பி.கே.நாயர், ஈரானின் அப்பாஸ் கியாரெஸ்துபி, போலந்து நாட்டின் ஆந்த்ரே வாய்டா, தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார், மக்கள் பாடகர் ப.திருவுடையான் ஆகியோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.