காற்றழுத்த தாழ்வு நிலையில் முன்னேற்றம் இல்லை: தென் கடலோர தமிழகத்தில் மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வு நிலையில் முன்னேற்றம் இல்லை: தென் கடலோர தமிழகத்தில் மழை பெய்யும்
Updated on
1 min read

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை எந்தவித முன்னேற்ற மும் இன்றி, அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதனால் தென் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியும், குறிப்பிடும்படியாக மழை பொழிவு இல்லை. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது இலங்கை அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள் ளது. சென்னையை பொருத்த வரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

இதற்கிடையே, திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் வேதா ரண்யத்தில் 5 செ.மீ., பாம்பன், திருத்துறைபூண்டியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in