

தீபாவளிப் பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் பேருந்து மற்றும் ரயில் மூலம் மீண்டும் சென்னை திரும்பினர். இவர்கள் அனைவரும் நேற்று ஒட்டுமொத்தமாக சென்னை திரும்பியதால் கூடுவாஞ்சேரி - தாம் பரம் இடையே நேற்று அதிகாலை தொடங்கி முற்பகல்வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து கடந்த 26, 27, 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 225 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதைத் தவிர, சிறப்பு ரயில் களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையில் இருந்து தீபாவளி கொண்டாட்டத்துக்காக சுமார் 5 லட் சம் மக்கள் சொந்த ஊர் சென்றனர்.
அவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்து கள் நேற்று இயக்கப்பட்டன. இன் றும் இயக்கப்பட உள்ளன. இந் நிலையில், வெளியூர் சென்ற பயணி களில் பெரும்பான்மையானோர் நேற்று சென்னை திரும்பினர்.
இதனால் சென்னையின் நுழைவு வாயிலான கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, தென்மாவட்டங் களில் இருந்து சென்னை வந்த பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரை ஜி.எஸ்.டி சாலையில் ஸ்தம்பித்து நின்றன. போக்குவரத்து நெரிசலால் பெருங் களத்தூர், தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
வெளியூரில் இருந்து வந்த வாக னங்கள் அனைத்தும் தாம்பரம் நக ருக்குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. அவை அனைத்தும் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேட்டுக்கு திருப்பி விடப்பட்டன.
தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம் , கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதி களுக்கு செல்பவர்கள் பெருங்களத் தூரில் இறங்கி மாநகர பேருந்து, தனியார் கார், ஆட்டோ மூலம் சென் றனர். இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு வாகனங் கள் செங்கல்பட்டு வந்தாலும்கூட, அதன் பிறகு சென்னைக்கு வர இரண்டரை மணி நேரம் ஆனது. இத னால் பயணிகள், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளா னார்கள்.
மாநகரப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி யது. ஊருக்குச் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பண்டிகை முடித்து திரும் பும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்படாதது வேதனை யளிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோக்களும், கால் டாக்சிகளும் அதிக கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றனர். சிலர் அதுவும் கிடைக்காமல் நடுரோட்டில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலை, பெருங்களத்தூரில் இருந்து வேளச்சேரி சாலையை இணைக்கும் ஈஸ்டன் பைபாஸ் சாலை திட்டங்களை விரைவில் நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.