தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் (நவ.16) முதல் நவ.20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் உள்ளது. ஆனால் கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in