தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்: ஹெச்.ராஜா உறுதி

சிவகங்கை அரண்மனைவாசலில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
சிவகங்கை அரண்மனைவாசலில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
Updated on
1 min read

சிவகங்கை: தமிழகத்தில் பாஜக ஆட் சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப் படுத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பால் விலை, மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் உதயா, மாவட்டத் துணைத் தலைவர் சுகனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஹெச்.ராஜா கூறியதாவது: டெல்லிக்குச் சென்ற ஆளுநரை தமிழகத்தை விட்டு மூட்டை முடிச்சை கட்டிவிட்டார் என்று பேசுகின்றனர். ஆளுநர் தமிழகத்தில்தான் இருப்பார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல், தமிழகத்தை விட்டு அவர் போகமாட்டார். கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு வேதனை அளிக்கிறது.

இதற்கு மருத்துவர்களின் பொறுப் பற்ற செயல்தான் காரணம். தமி ழகத்தில் கஞ்சா பயன்பாடு அதி கரித்துள்ளதால் சட்டம், ஒழுங்குகெட்டு மோசமான சூழல் நிலவுகிறது. விடியா ஆட்சி அகற்றப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in