நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
Updated on
1 min read

ராமேசுவரம்: வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 520-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாட்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்ததோடு, 3 விசைப்படகுகளில் வலைகளை அறுத்து கடலில் மூழ்கடித்து ஜி.பி.எஸ். வழிகாட்டும் கருவிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இதனால், மீன்பாடு இல்லாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in