Last Updated : 16 Nov, 2022 12:46 AM

 

Published : 16 Nov 2022 12:46 AM
Last Updated : 16 Nov 2022 12:46 AM

தேனி | உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட பெண் வருவாய் ஆய்வாளர்

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நாட்டாண்மை நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி சுந்தரி(56) இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு பவித்ரா(34), ஆதித்யா(32) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி பவித்ரா தெலுங்கானா மாநிலத்திலும், ஆதித்யா கம்பம் காளவாசல் தெருவிலும் வசித்து வருகின்றனர். கணவர் வேணுகோபால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த சுந்தரிக்கு உடலில் இரத்த அளவு குறைந்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்தநிலையில், கடந்த 30 நாட்களுக்கு முன்பு மூலநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இருப்பினும் சரியாக தூக்கம் வராமல் கடும் மன உளைச்சசலிலே இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 9-ம் தேதி மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதித்யா தனது தாயாரை பார்க்க வீட்டிற்கு சென்ற போது கதவு பூட்டி கிடந்தது. மொபைலிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆதித்யா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டநிலையில் இறந்துகிடந்தார். உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கம்பம் தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x