Published : 15 Nov 2022 04:25 AM
Last Updated : 15 Nov 2022 04:25 AM

51 ஏழை ஜோடி மணமக்களுடன் இணைந்து பிப்.23-ல் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமணம்

மதுரை: மதுரையில் பிப். 23-ம் தேதி ஜெ. பேரவை சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகளின் திருமணம் 51 ஏழை ஜோடிகளுடன் இணைந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், டி குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அதிமுகவுக்கு வரும் சோதனைகளை கே.பழனிசாமி தனது அனுபவம், பொறுமையால் எதிர் கொண்டு வெற்றி பெறுவார். தமிழகத்தில் தற்போது பயங்கரவாதம், தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது. எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், அதிமுகவின் 51-வது பொன்விழாவை எழுச்சியோடு கொண்டாட ஏற்பாடு நடக்கிறது.

மதுரை மாவட்ட அதிமுக சார்பில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி, டி. குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் 51 ஏழை ஜோடிகளுக்கு கே.பழனிசாமி திருமணம் நடத்தி வைக்கிறார் என்றார்.

இவ்விழா குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: 51 ஏழை ஜோடிகளின் திரு மணத்துடன் ஆர்.பி. உதயகுமார் தனது மகள் திருமணத்தையும் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அவரது மகள் பிரியதர் ஷினி(22) பி.இ. முடித்துவிட்டு மதுரையிலுள்ள கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ படிக்கிறார். அம்மா சாரிட்டபிள் அறக்கட்டளை செய லாளராகவும் உள்ளார்.

அவருக்கும் உதயகுமாரின் மனைவி உ.தாமரைச் செல்வியின் உடன் பிறந்த சகோதரர் நாகராஜின் மகன் குமாருக்கும் (25) திருமணம் நடத்த ஏற்பாடாகி உள்ளது. பட்டதாரியான குமாரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல். தனது மகள் திருமணத்தை ஏழை ஜோடிகளுடன் இணைந்து நடத்த உதயகுமார் விரும்புகிறார். அதிமுக முன்னாள் அமைச் சர்கள், கட்சியின் மூத்த நிர் வாகிகள், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங் கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x