

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், நாகை மாவட்டம், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.