Published : 10 Nov 2016 08:47 AM
Last Updated : 10 Nov 2016 08:47 AM

ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு: பத்திரப் பதிவில் 30 சதவீதம் பாதிப்பு - பதிவுத்துறை அதிகாரி தகவல்

மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் நேற்று பத்திரப்பதிவில் 30 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, சென்னை யில் உள்ள பத்திரப்பதிவு அலு வலக ஊழியர் ஒருவர் கூறும் போது, ‘‘இன்று காலை வந்ததும் பதிவுத்துறை அதிகாரிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம். ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம் இருந்தால் 100 ரூபாய் நோட்டு களாகவும், அதற்கு மேல் இருந் தால் வங்கி வரைவோலை யாகவும் வாங்கிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி மட்டுமே நாங்கள் கட்டணத்தைப் பெற்று வருகிறோம்’’ என்றார்.

இ-ஸ்டாம்பிங் சேவையை வழங்கி வரும் ஸ்டாக் ஹோல்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த உதவி மேலாளர் எல்.பரமேஸ்வர ரெட்டி கூறும்போது, ‘‘தற்போது நாங்கள் இ-ஸ்டாம்பிங் பெற வருபவர்களிடம் இருந்து 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே பெறு கிறோம். இணைய வங்கி சேவை மூலமாக பணத்தை எங்கள் கணக்குக்கு அனுப்புபவர்கள், ஏற்கெனவே வங்கியில் டிடி எடுத்தவர்களுக்கும் உடனடி யாக இ-ஸ்டாம்பிங் அளிக்கி றோம். வங்கி காசோலைகளுக்கு அந்த பணம் எங்கள் வங்கிக் கணக்கில் வந்ததும், அளிப் போம்’’ என்றார்.

இதேபோல், கடலூர் மாவட் டத்தில் பத்திரப்பதிவு அலு வலகங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப் படாததால், பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வில்லங்க சான்று உள்ளிட்ட சான்றுகளைப் பெற முடியாமல் திரும்பிச் சென்றனர். மேலும், ஈரோடு, தஞ்சை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பத்திரப்பதிவு பணிகள் பாதிப்புக்குள்ளாகின.

இது தொடர்பாக, பத்திரப் பதிவு உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சார் பதிவாளர் அலுவல கங்களில் பதிவுக்கட்டணம் என்பது ஒரு சதவீதம் தான். மேலும், திருமண பதிவு சான்றிதழ்கள், வில்லங்க சான்று மற்றும் ஆவண நகல்களுக்கு குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் தவிர 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

விளைநிலங்கள் பதிவு, அங்கீகாரமற்ற வீட்டு மனை கள் பதிவு தடை செய்யப்பட் டுள்ளதால், ஏற்கெனவே பத்திரப் பதிவு வருவாய் பாதிக்கப்பட் டுள்ளது. இது தவிர, அஷ்டமி, நவமி, கரிநாள், மரணயோகம் இருக்கும் நாட்களில் பத்திரப் பதிவு வழக்கமாகவே குறையும்; வருவாயும் குறையும். தற்போது ரூபாய் நோட்டுகள் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு, பத்திரப்பதிவில் 30 சதவீதம் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது நிரந்தரமல்ல. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாகி, பணப்புழக்கம் அதிகரிக்கும்போதே பதிவுகளும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x