

தமிழகத்தில் உள்ள மாவட்டங் களை 5 மண்டலங்களாகப் பிரித்து கடந்த மார்ச்சில் நடைபெற்ற வாக் காளர் சேர்க்கை முகாமில் விண் ணப்பித்தவர்களுக்கு பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை கள் வழங்கப்பட உள்ளன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம்கள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர் களாகப் பதிவு செய்துகொண் டனர். ஆனால், இதுவரை அவர் களுக்கு வாக்காளர் அடை யாள அட்டைகள் வழங்கப்பட வில்லை.
தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்
இந்நிலையில், தமிழகம் முழு வதும் கடந்த மார்ச்சில் பெயர் பதிவு செய்த புதிய வாக்காளர்களுக்கு முதல்கட்டமாக ஆகஸ்ட் மாதத் தில் பிளாஸ்டிக்கினால் தயாரிக் கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான பணிகளை மேற் கொள்ள மும்பையிலுள்ள பிரிண் டோகிராபி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹைதராபாதி லுள்ள ஸ்விஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, பிளாஸ்டிக்கால் ஆன வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை என 5 மண்டலங்களாக தமிழகத் திலுள்ள மாவட்டங்கள் பிரிக்கப் பட்டுள்ளன.
மும்பையிலுள்ள பிரிண்டோ கிராபி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் சென்னை, திருச்சி, மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
ஹைதராபாதிலுள்ள ஸ்விஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் சேலம், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட் டங்களிலுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன.
ஏற்கெனவே வாக்காளர் அடை யாள அட்டைகள் வைத்திருப் போர் 001சி என்ற படிவத்தை பூர்த்திசெய்து வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப் பித்து பிளாஸ்டிக்கினால் ஆன புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள் ளலாம் என்றும் தமிழக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.